செஞ்சியை அருகே சத்தியமங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலியாக நிரந்தர வைப்பு ரசீது கொடுத்து 130க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.4 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர். இது குறித்து பொது மக்களின் புகாரின் பேரில் கடந்த 18-ம் தேதி முதல் கூட்டுறவு சங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று இந்த சங்கத்தில் ஆரணி எம்பி, டாக்டர் விஷ்ணுபிரசாத் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு விசாரணை நடத்தி கொண்டிருந்த கள அலுவலர் அமர்நாத், சங்க பணியாளர்கள் பசுமலை, விஜயராஜ் மற்றும் பணத்தை பறிகொத்த பொது மக்களிடம் மோசடி குறித்து கேட்டறிந்தார். பிறகு கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் போனில் பேசினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய எம்பி, “கூட்டுறவு சங்கத்தில் கொடுத்த ரசீதை உண்மை என நம்பி பொது மக்கள் டெபாசிட் செய்துள்ளனர். கூட்டுறவு சங்கத்தை பயன்படுத்தி தனிநபர்கள் 130க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். துறைரீதியாக விசாரணை நடத்தி முடிக்க பல மாதங்கள் ஆகும். எனவே போலீஸார் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். அதிகாரிகளிடம் விரைவான நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுள்ளேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago