போலி ஆவணங்கள் மூலம் பட்டா, சிட்டா பெற்றிருந்தால் ரத்து செய்து, தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் தலைமையில் நடந்தது. 9 வருவாய் கிராமங்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்தன. அப்போது டிஆர்ஓ கூறியதாவது:
சுண்டேகுப்பம், திம்மாபுரம் பெரியமுத்தூர், தட்ரஹள்ளி, சௌட்டஹள்ளி, கால்வேஹள்ளி உட்பட 9 வருவாய் கிராமங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதில் ஆன்லைன் மற்றும் நேரில் வைத்துள்ள ஆவணங்களை ஒப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில் பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றை போலி ஆவணங்களாக தயாரித்தோ, ஆன்லைனில் போலியாக முறைகேடு செய்யப்பட்டிருந் தாலோ, தவறு செய்துள்ளவர்களின் பெயரில் உள்ள பட்டா, சிட்டா சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டு, தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கரோனா காலம் என்பதால் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 30-ம் தேதி ஜமாபந்தி நிறைவு நாளில் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார். இந்நிகழ்வின் போது, வட்டாட்சியர் வெங்கடேசன், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago