‘மீன் வளர்ப்போர் முகமை உறுப்பினராக வாய்ப்பு’ :

By செய்திப்பிரிவு

புதிதாக ஏற்படுத்தப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதன் முதல் நிர்வாக குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மீன் வளர்ப்போர் அனைவரையும் உறுப்பினர்களாக சேர்க்கவும், மீன் வளர்ப்போருக்கு உள்ளீட்டு மானியம் அரசு மூலம் பெற்று வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இருளர் மற்றும் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னு ரிமை அடிப்படையில் மீன் வளர்க்க ஊக்கு விக்கவும் பண்ணைக்குட்டை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை ஆகியவற்றி லும் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க வேண்டும் என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் உறுப்பினர்களாக சேர விரும்புபவர் கள் உதவி இயக்குநர், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்:16, 5-வது மேற்கு குறுக்குத் தெரு, காந்திநகர், காட்பாடி, வேலூர்-2 என்ற முகவரியில் நேரில் அணுகலாம்.

அல்லது 0416-2240329 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என வேலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்கு நர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்