நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை நடைபெற்றது. இதில், சயான், மனோஜ் சாமி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இப்போது குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக பழனிசாமி மற்றும் நடராஜ் ஆகியோர் ஆஜராகி வந்தனர்.
கோடநாடு வழக்கு, வரும் 29-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டு, புதிய சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக என்.கனகராஜ், எம்.ஷாஜகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழகஅரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago