விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகளில் - முன்னறிவிப்பு இல்லாமல் ஆய்வு மேற்கொள்ளுங்கள் : ஆட்சியருக்கு மக்கள் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

விழுப்புரம், திண்டிவனம் நக ராட்சிகளில் முன்னறிவிப்பு இல் லாமல் ஆய்வு நடத்தினால் மட்டுமே, நகராட்சி பணிகளின் உண்மை நிலையை ஆட்சியர் கண்டறிய முடியும் என்று இங்கு வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், வாரத்தில் 6 நாட்கள் திண்டிவனம், விழுப்புரம் நகராட் சிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆய்வில். ‘பொது கழிப்பறைகள் மற்றும் வீதி விளக்குகள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, ஆய்வு நடத்தப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

நகராட்சிகளில் ஆய்வு மேற் கொள்ளும் ஆட்சியர், பிரதான சாலைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் மட்டுமே இந்த ஆய்வை மேற்கொள்வதால் அப்பகுதிகளை மட்டும் நகராட்சி நிர்வாகத்தினர் பராமரிப்பதில் முழு கவனம் செலுத்துகின்றனர். அதே நேரம் குடியிருப்பு பகுதிகளில் வழக்கமான நிலையே தொடர்கிறது. உதாரணமாக, விழுப்புரம் வண்டிமேடு பகுதிகளில் அள்ளப்படாமல் சாலையோரம் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. திண்டிவனம் நகராட்சியில் கிடங்கல், காவேரிபாக்கம் பகுதிகளில் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் இருக்கின்றன.

“விழுப்புரம், திண்டிவனம் இரு நகராட்சிகளிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில், முன்னறிவிப்பு இல்லாமல் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டால் நகராட்சிகளின் நிர்வாகம் எப்படி உள்ளது என்பதை கண்கூடாக பார்க்க முடியும்.

இதை விடுத்து நகரின் பிரதானப் பகுதிகளில் மட்டும், முன்னரே திட்டமிட்டு சென்று, அது நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிய வந்து, அங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளால் எந்தப் பயனும் இல்லை” என்று இந்த இரு நகராட்சிகளிலும் உள்ள குடியிருப்புவாசிகள் தெரிவிக் கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்