சிவகங்கை மாவட்டத்தில் மளிகை தொகுப்பு வழங்குவது நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் 3 நாட்களாக ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை, 14 வகை மளிகைப்பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதால் ரேஷன்கடை ஊழியர்களிடம் கார்டுதாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்துக்கு 60 சதவீதம் அளவுக்கே மளிகைப் பொருட்கள் வந்ததால், தினமும் ரேஷன்கடை ஒன்றுக்கு 100 முதல் 150 தொகுப்புகள் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன.

இதனால் ரேஷன் கடைகளில் நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டன. சில கடைகளில் ஒருநாள் இடைவெளியில் பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் மளிகைப் பொருட்கள் இல்லாததால் ரேஷன் கடைகளுக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ரேஷன் கடை களில் மளிகைத் தொகுப்பு, நிவாரணத் தொகை வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களிடம் கார்டுதாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மளிகை பொருட்கள் தீர்ந்ததால், நிவார ணத்தொகை வழங்க வேண்டாம் என்றோம். மளிகைப்பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் ஓரிரு நாட்களில் நிவாரணத்தொகை, மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்