கரோனா ஊரடங்கில் விவசாயிகளுக்கு கைகொடுத்த கீரை சாகுபடி :

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்திலும் கீரை சாகுபடி கைகொடுத்துள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, சூளகிரி, தேன் கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பலவகையான கீரைகள் சாகுபடி செய்கின்றனர். இங்கிருந்து ஓசூர், சூளகிரி நடைபெறும் சந்தைகள் மூலம் கீரைகள், உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், உடலுக்கு வலு சேர்க்கவும் பல வகையான கீரைகள் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், இதனால் கீரை சாகுபடியில் கணிசமான வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தாளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தமிழ் கூறும்போது, குறைந்தபட்சம் 25 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு கீரை வகைகள் விளைந்து அறுவடைக்கு தயாராகிறது. தற்போது போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து கீரை சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இங்கு விளைவிக்கப்படும் சிறுகீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, அரைக்கீரை உள்ளிட்ட பல்வேறு கீரை வகைகளை உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து கீரைகளை வாங்கிச் செல்கின்றனர். விதைகள், உரங்கள் என ரூ. 10 ஆயிரம் மூலதனமாக கொண்டு கீரைகளை பயிரிட்டு, அதை சிறுசிறு கட்டுகளாக கட்டி விற்பனை செய்கிறோம்.

மேலும் கரோனா நோயை எதிர்கொள்ள சத்தான காய்கறிகள், கீரை வகைகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால், ஊரடங்கிலும் பொதுமக்கள் பல வகையான கீரைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. மேலும், ஒரு கட்டு கீரை ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்