சாக்கடையால் சுகாதாரக் கேடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார் :

அவிநாசி அருகே பெரியாயிபாளையத்தில் சாக்கடையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், கழிவுநீரை அகற்றக் கோரியும், ஊராட்சிஒன்றிய ஆணையாளருக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து அக்கட்சியினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரைஊராட்சிக்குட்பட்ட பெரியாயிபாளையத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட சாக்கடை, தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் சாக்கடை நீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியுள்ளது.

மேலும் ஊராட்சி நிர்வாகம் சரிவர சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. சாக்கடைக் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள சாக்கடைகழிவு நீரை வெளியேற்றி, பழுதடைந்த சாக்கடையை சீரமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பெரியாயிபாளையம் பகுதி பொதுமக்கள் சார்பில், கையெழுத்து இயக்கம்நடத்தி, கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்