அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் குறித்து தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 579 உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் 87,381 செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு ரூ.140 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி என்கிற குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவையினை வழங்கி வருகிறது. இந்நிலையில் அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று பயனடைந்து வரும் சந்தாதாரர்களின் விருப்பம் இல்லாமல் செட்டாப் பாக்ஸ்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாற்றினாலோ, அரசு சிக்னல் இனிவராது என்று தவறான தகவல் களை பொதுமக்களிடம் பரப்பினாலோ மற்றும் அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றி தனியார் செட்டாப் பாக்ஸ்களை பொருத்தி னாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசு கேபிள் டிவி சேவை தொடர்ந்து எவ்வித தடையும் இன்றி செயல்படும். மேற்படி செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago