செஞ்சி அருகே சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பெயரில் நிரந்தர வைப்பு நிதி என்று போலி ரசீதுவழங்கி ரூ.4 கோடி மோசடி செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப் படையில் நேற்று முன்தினம் முதல் கூட்டுறவு துணைப் பதிவாளர் குருசாமி தலைமையிலான குழுவினர், இறந்த கூட்டுறவு சங்க செயலாளர் சாதிக் பாஷா வின் குடும்பத்தார் மற்றும் தற்போது பணியில் இருக்கும் பசுமலை, முருகன், விஜயராஜ் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணை குறித்து கூட்டுறவு அலுவலர்களிடம் கேட்ட போது, “சாதிக் பாஷாவை தினமும் காலை 8 மணிக்கு காரில் வரும் 6 பேர் அழைத்துச் சென்று இரவு 10 மணிக்கு கொண்டுவந்து வீட்டில் விடுவார்கள்.
3 பேர் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், மற்ற 3 பேர் யாரென்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் சாதிக் பாஷா மட்டுமே இதனை செய்துள்ளதாக திட்டமிடுவதை ஏற்க முடியாது என்று இறந்த சாதிக் பாஷாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த 3 பேர் யார் என்று தற்போது பணியில் உள்ள கூட்டுறவு சங்கப் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், ரசீதில் தனி அலுவலர் என்ற இடத்தில் பசுமலை கையெழுத்திட்டுள்ளார்.
அவரிடம் கூடுதலாக விசாரிக்க வேண்டியுள்ளது. இந்த விசாரணை முடிவடைய மேலும் சில நாட்களாகும்” என்றனர்.
இதற்கிடையே செஞ்சியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ரூ.1 கோடியை டெபாசிட் செய்துள்ளதாக தற்போது கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. தனி அலுவலர் கையெழுத்தை போட்ட பசுமலையிடம் இதுகுறித்து கேட்க பலமுறை முயன்றும் அவரது விளக்கத்தைப் பெற இய லவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago