ஆம்பூர், ஒடுக்கத்தூர், சோமலாபுரம் பகுதிகளில் - நாளை முதல் 5 நாட்களுக்கு : 2 மணி நேரம் மின் நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம், பள்ளிகொண்டா மின் கோட்டத்துக்கு துணை மின் நிலையங்களில் நாளை (24-ம் தேதி) முதல் 28-ம் தேதி வரை மின்பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் தினசரி காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை 2 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

அதன்படி, ஜூன் 24-ம் தேதி (வியாழக்கிழமை) ஆம்பூர் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட மாந்தோப்பு, ஆயுஷாபி நகர், ஜே.ஜே.நகர், சோமலாபுரம், கோவிந்தாபுரம், கன்னிகாபுரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி, காதர்பேட்டை, ஒடுக்கத்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வேப்பங்குப்பம், குப்பம்பட்டு, ராம நாயினிகுப்பம், அரிமலை, ஆசனாம்பட்டு, விண்ணமங்கலம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஐயப்பனூர், விண்ண மங்கலம், பெரியாங்குப்பம், கம்மியம்பட்டு, கென்னடிகுப்பம், வடகாத்திப்பட்டி, டோல்கேட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

ஜூன் 25-ம் (வெள்ளிக்கிழமை) சோமலாபுரம் துணை மின் நிலை யத்துக்கு உட்பட்ட வீராகோயில், சோமலாபுரம், கம்பிகொல்லை, மாந்தோப்பு, மருத்துவர் நகர், அரங்கல்துருகம், கரும்பூர், வீராங்குப்பம், குமாரமங்கலம், கதவாளம், கூத்தம்பாக்கம், அகரஞ்சேரி, கோவிந்தாபுரம், சின்னசேரி பள்ளிகொண்டா துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வெட்டுவானம், பிராமணமங்கலம், ஈட்டியார்பாளையம், பள்ளிகொண்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

ஜூன் 26-ம் தேதி (சனிக்கிழமை) ஆலங்குப்பம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மாதகடுப்பு, காந்திநகர், பெரியாங்குப்பம், தொப்பூர், புறவழிச்சாலை, இந்திரா நகர், சாமியார் மடம், சான்றோர்குப்பம், கோல்மங்கலம், கோவிந்தம்பாடி, கீழ்கிருஷ்ணாபுரம், தட்டாங்குட்டை, ராமாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

ஜூன் 28-ம் தேதி (திங்கள்கிழமை) தேவலாபுரம், கோவிந்தாபுரம், ராலகொத்தூர், சோலூர், கிரிசமுத்திரம், மாரப்பட்டு, செங்கிலிகுப்பம், வடகாத்திப்பட்டி, மாதனூர், தேவிகாபுரம், ஜமீன், வேப்பங்கால், பள்ளிகொண்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என பள்ளிகொண்டா மின்கோட்ட செயற் பொறியாளர் எஸ்.விஜய குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்