முழு ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் நேற்று இயங்கத் தொடங்கின.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பேருந்துகள், குளிர்சாதன வசதியில்லாமல், 50 சதவீத பயணிகளுடன் இயங்கலாம் என தமிழக அரசு, கரோனா முழு ஊரடங்கில் தளர்வு அளித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயங்கத்தொடங்கின. இதில், அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த 240 பேருந்துகளில் சுமார் 50 சதவீதம் முதல், 60 சதவீதம் வரையான பேருந்துகள் நேற்று இயங்கத் தொடங்கின. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வழக்கமாக இயங்கும்மாநகர பேருந்துகளில், சுமார் 60 சதவீத பேருந்துகளே இயங்கின.
பயணிகள் கைகளில் கிருமி நாசினி தடவிக் கொள்ளல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனாதடுப்பு நடவடிக்கைகளோடு இயங்கும் இந்த பேருந்துகளில், பெரும்பாலான பேருந்துகள்,நகர பகுதிகளில் இயங்கின. அதே நேரத்தில், மாவட்டத்தின் கிராமப் புறங்களில், பல பகுதிகளில் பேருந்துகள் இயங்கவில்லை எனபொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், தேவையைப் பொறுத்து, மாவட்டத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கநடவடிக்கை எடுக்கப்படும் எனபோக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு போக்குவரத்துக் கழகத்தின் காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து 33 உள்ளூர் பேருந்துகள், 29 வெளியூர் பேருந்துகளும், ஓரிக்கை பணிமனையில் இருந்து 49 வெளியூர் பேருந்துகளும், ஓரிக்கை 2-ம் பணிமனையில் இருந்து25 வெளியூர் பேருந்துகள், 7 உள்ளூர்பேருந்துகள், உத்திரமேரூர் பணிமனையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு 6 பேருந்துகளும் இயங்கத் தொடங்கின.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு போக்குவரத்துக் கழகத்தின் செங்கல்பட்டு பணிமனையில் உள்ள 92 பேருந்துகளில், 50 சதவீத பேருந்துகள் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் நேற்று இயங்கத் தொடங்கின.
மாமல்லபுரம் - கிழக்கு கடற்கரை சாலை, திருப்போரூர் - பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகள் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயங்கதொடங்கியதால், நேற்று பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து, பயணம் மேற்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago