கரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தெரிவிக் கப்பட்ட விவரங்கள் வருமாறு:
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நிகழும்கரோனா தொற்றால் இறந்தவர் களின் இறப்பு சான்றிதழ் crstn.org என்ற இணையதளத்தில் பதியப்பட்டுள்ளது. பொது மக்கள் தாங்களே சான்றிதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பிறப்பு இறப்பு பதிவாளர் மூலமாகவும் இச்சான்றிதழ் அளிக்கப்படும். சான்றிதழில் ஏதேனும் திருத்தம் இருப்பின் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி, திருத்தம் மேற்கொள்ளலாம்.
இறப்பிற்கான காரணம் குறித்த தகவல்கள் இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படாது. இறப்பிற்கான காரணம் குறித்த தகவல் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில் தான் வழங்கப்படும். பொதுமக்கள் இது தொடர்பான தகவல் மேலும் பெற துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள், விழுப்புரம். அலுவலக எண் 90038 64985 தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சரஸ்வதி, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் குந்தவை தேவி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் சண்முகக்கனி, துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago