திருநெல்வேலியைச் சேர்ந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாநகர் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரியான வெங்கடேஷ்(25), அதே பகுதியைச் சேர்ந்த பி.எஸ்சி. பட்டதாரியான ஜோதிலட்சுமி(21) ஆகிய இருவரும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது இருவரின் பெற்றோர்களுக்கும் தெரியவந்துள்ளது. காதலுக்கு ஜோதிலெட்சுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் ஜோதிலெட்சுமி இருவரும் கடந்த 18-ம் தேதி தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
அதனையடுத்து வெங்க டேஷின் நண்பர்கள் உதவியுடன் பாதுகாப்பு கேட்டு நேற்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் கிடம் தஞ்சமடைந்தனர். காவல் கண்காணிப்பாளர் காதலர்கள் இருவரின் பெற்றோரையும் அழைத்துப் பேசி முடிவெடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து ராமநாதபுரம் நகர் டிஎஸ்பி ராஜா இருதரப்பு பெற்றோர் மற்றும் காதலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரு கிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago