தென்பெண்ணை ஆற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு :

By செய்திப்பிரிவு

காவேரிப்பட்டணம் தென் பெண்ணை ஆற்றில் கழிவுகளை கொட்டுவதால் நீர்நிலை மாசுபடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் காவேரிப்பட்டணம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு செல்கிறது. காவேரிப்பட்டணம் நகரை ஒட்டிச் செல்லும் தென்பெண்ணை ஆற்றில், பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் சிலர் பிளாஸ்டிக் குப்பைகள், கோழி இறைச்சி கழிவுகள் அதிகளவில் கொட்டுவதால், தண்ணீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. தற்போது, அணையில் இருந்து நீர் திறப்பு இல்லாததால், தென்பெண்ணை ஆற்றில் பள்ளமான இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், ஆகாயத் தாமரைகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகிறது.

எனவே, பொதுப்பணித் துறையினர் தென் பெண்ணை ஆற்றில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, காவேரிப்பட்டணம் மட்டுமின்றி தென்பெண்ணை ஆறு கடந்து செல்லும் பல்வேறு பகுதிகளிலும் ஆற்றில் குப்பைகள் கொட்டுவது தொடர் கதையாக உள்ளது. இதனைத் தடுக்க பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்