சாராயம் காய்ச்சிய திமுக பிரதிநிதி உட்பட 3 பேர் கைது :

By செய்திப்பிரிவு

பேராவூரணி அருகே உள்ள மேலமணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன்(53), திமுக வட்ட பிரதிநிதி. செல்வராஜ்(48), திமுகவைச் சேர்ந்த இவர், ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராகவும் உள்ளார். இவர்களின் நண்பர் கணேசன்(57). இவர்கள் மூவரும் சேர்ந்து அய்யப்பனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில், கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக பேராவூரணி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, நேற்று தென்னந்தோப்பில் போலீஸார் சோதனை செய்தபோது, பேரல் மற்றும் பானையில் 110 லிட்டர் சாராய ஊறலும், 4 லிட்டர் கள்ளச் சாராயமும் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அய்யப்பன், செல்வராஜ், கணேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்