ஜவுளி, நகைக்கடைகளை திறக்க : வணிகர்கள் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஜவுளி, நகை மற்றும் அடகு கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என வணிகர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூரில் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மாவட்டத் தலைவர் ஞானவேலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.வி.எம்.குமார் வரவேற்றார். நகரச் செயலாளர் பாபு அசோகன், இணை செயலாளர் திவ்யா சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் 3-வது அலையை கருத்தில் கொண்டு அனைத்து கடைகள், சிறு, குறு தொழில்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேர கட்டுப்பாடு அனுமதியால் வணிகம் தொழில்துறை, தொழிலாளர் நலம், பொருளாதாரம் கரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும்.

அதேநேரம், தளர்வுகள் அளிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜவுளி, நகை மற்றும் அடகு கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்பட அனுமதி இல்லாததால் நலிவடையும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.

இந்த தொழில்கள் செயல்பட விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி பொருளாளர் அருண் பிரசாத் நன்றி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்