சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் அருகேயுள்ள பெரிய எடப்பாளையம் காமராஜர்தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(32). இவர் கடந்த 16-ம் தேதி நண்பர் ரஜினியுடன் (40) ஒரு சுற்றுச் சுவரின் மீது அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தார். திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் கார்த்திக், ரஜினி ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள்சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்த கார்த்திக் கடந்த 18-ம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்