தஞ்சாவூரை அடுத்த சூரக்கோட்டை அருகே சைதாம்பாள்புரத்தில் செயல்பட்டு வரும் தென்னை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் தொழிற்சாலையில் நேற்று மதியம் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்புத் துறையினர் வந்து, 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், இயந்திரங்கள், வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago