திருவள்ளுர் மற்றும் திருத்தணியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆய்வு செய்து, நீதிபதிகளுடன் வழக்குகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பொறுப்பேற்றவுடன் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீதி மன்றங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர்,நீதிபதிகளுடன் கரோனா காலத்தில் நடத்தப்பட்டு வரும் வழக்குப் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் குடும்பத்தினர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தலைமை நீதிபதியிடம், நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர் நீதிமன்றம், வங்கி, அஞ்சல் நிலையஅலுவலகம், கேன்டீன் போன்ற வசதிகளை செய்து தரவேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.
இதேபோல், சஞ்ஜிப் பானர்ஜி திருத்தணிக்குச் சென்று அங்குள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago