விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகளில் - வாரந்தோறும் தலா 3 நாட்கள் நடைபயிற்சியோடு ஆய்வு : ஆட்சியர் மோகன் தகவல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியர் மோகன் 2- வது நாளாக நேற்று காலைவிழுப்புரம் நகரில் நடைபயிற்சி யோடு ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து ”இந்து தமிழி”டம் ஆட்சியர் மோகன் கூறியது:

சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்வோர் நல்ல கழிவறை வசதியுள்ள இடத்தில் நிறுத்தவும் என ஓட்டுநரிடம் சொல்வார்கள். அந்த வகையில் விழுப்புரம் , திண்டிவனம் நகராட்சிகளில் உள்ள பொதுகழிவறைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். வீதி விளக்குகள் அனைத்தும்எரியவேண்டும் என நகராட்சிஆணையர்களிடம் அறிவுறுத்தி யுள்ளேன். வாரத்தில் 6 நாட்களில் காலை 6. 45 மணி முதல்8 மணிவரை இரண்டு நகராட்சிகளி லும் தலா 3 நாட்கள் என நடைபயிற்சி மூலம் ஆய்வு மேற் கொள்ள உள்ளேன். காலையில் அமைச்சர்களின் நிகழ்ச்சி இருந் தால் அன்று மாலை நடைபயிற்சி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக ரயில்வே மைதானத்தில் விளையாடிக்கொண் டிருந்த இளைஞர்களிடம், நானும் கால்பந்தாட்ட விளையாட்டில் ஆர்வம் உள்ளவன்தான். தற் போது கரோனா தொற்றால் மாஸ்க் அணிந்து கொண்டு விளையாட முடியாது. எனவே அரசு அனுமதி அளிக்கும்வரை விளையாட வேண்டாம் என்று கைகூப்பி கேட்டுக்கொண்டார். அப்போது சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமார், நகராட்சி ஆணை யர் தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்