ராகுல் காந்தியின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டிசார்பில் நேற்று மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் தலைமையில் தேசிய தலைவர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் சுமார் 500 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் 250 பேருக்கு ஒரு லிட்டர் வீதம் பெட்ரோல் வழங்கப் பட்டது. மேலும் 600 பேருக்கு மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
இதே போல விழுப்புரம் வடக்குமாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத்தலைவர் ரமேஷ் தலைமையில் ரெட்டணை கிராமத்தில் பொது மக்களுக்கு நிவாரணப்பொருட் கள், முகக்கவசங்கள்,கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் திண்டிவனம் நகர காங்கிரஸ் சார்பில் வானவில் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விருத்தாசலம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழா விருத்தாசலம் மற்றும்நெய்வேலியில் கொண்டாடப் பட்டது.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் வல்லம் ராஜன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை, முகக்கவசம் வழங்கினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிக ளையும் அன்னதானமும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன் னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் வாசு பிரகாஷ், ராஜீவ்காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago