ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் அருகே மேலக் கோட்டை ரமலான் நகரைச் சேர்ந்த ஜஹாங்கீர் அலி (65). இவர் நேற்று மாலை, தனது ஆடுகளுக்கு வேப்பிலை பறிக்க மரத்தில் ஏறினார். அப்போது மேலே இருந்த மின் கம்பியில் கைகள் பட்டு மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கேணிக்கரை போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago