தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மருந்தான ‘ஆம்போடெரிசின்' மற்றும் இந்நோயை கட்டுக்குள் கொண்டு வரும் மாத்திரைகளை அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கத்தினர், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த மருந்து, மாத்திரைகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குருதி பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் டாக்டர் வேல்முருகன், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நேற்று ஒப்படைத்தார். தொடர்ந்து, அவற்றை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், கண்காணிப்பாளர் மருதுதுரை, கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு மருத்துவர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், நோயாளிகளின் பயன்பாட்டுக்காக ஆட்சியர் வழங்கினார்.
“முதற்கட்டமாக கோவை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இதுவரை 100 ஊசிகள், 1,000 மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன” என டாக் டர் வேல்முருகன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago