மேகேதாட்டுவில் அணை கட்டினால் போராட்டம்: காவிரி உரிமை மீட்புக் குழு :

By செய்திப்பிரிவு

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்த வழக்கில் கர்நாடகா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை ஏற்று, அந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் முடித்துவைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மேகேதாட்டுவில் அணை கட்டும் பணிகளைத் தொடங்குவேன் என தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்துக்கு வரும் தண்ணீரைத் தடுக்கும் வகையில், மேகேதாட்டுவில் அணை கட்டும் பணியைத் தொடங்கினால், ஆயிரக்கணக்கான தமிழர்கள் மேகேதாட்டுவுக்குச் சென்று மறியல் போராட்டம் நடத்துவோம் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்