பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண ஆணையர் உத்தரவு :

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென, அதிகாரிகளுக்கு திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பதி உத்தரவிட்டார்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலககூட்ட அரங்கில், அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் அவர் பேசும்போது, "பொதுமக்களிடமிருந்து மின்னஞ்சல், மனுக்கள் மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதேபோல, ‘அம்ரூத்' திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" என்றார். மாநகரப் பொறியாளர் ரவி, செயற்பொறியாளர்கள் திருமுருகன், முகமது சபியுல்லா, மாநகர நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார், 4 மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE