கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து துறைகளின் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருவதை அறிவதற்காக மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நிறைமதி ஊராட்சியில் 15-வது நிதி மானியக்குழு திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து தென்கீரனூர் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள், உள்ளாட்சி மற்றும் ஊராட்சித்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களிடம் பணிகள் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். மேலும், விளம்பார் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றங்கால் அமைக்கப்பட உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகண்ணன், செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மஞ்சுளா ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago