கரோனா தடுப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரும் என விருதுநகர் ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி தெரிவித்தார்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே 200 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார். அந்த வார்டில் உள்ளோருக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் வசதி, கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவது, மருத்துவர்கள், செவிலியர்கள் அளிக்கும் சிகிச்சை ஆகியவை தொடர்பாக நோயாளிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
பின்னர், கரோனா தடுப்பூசி போடும் இடத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், கரோனா பரிசோதனைக் கூடம், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையம், புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டிடங்கள், புற நோயாளிகள் வருகை குறித்து ஆய்வு செய்தார்.
அதன் பின் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பேசுகையில், கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த சிறப்பாகச் செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுகள். வரும் காலத்திலும் கரோனாவை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் ஒத்துழைக்க வேண்டும். கரோனா தடுப்பு பணிக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றார். முன்னதாக, விருதுநகர் பாண்டியன் நகர் ரேஷன் கடையில் கரோனா நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்குவதைப் பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago