திண்டுக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் ச.விசாகன் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். அரசால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும்.
மாவட்டத்தில் தொற்று கண்டறியப்பட்ட ஒரே பகுதியில் மூன்று வீடுகளில் உள்ளோருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அந்தப் பகுதியை முழுமையாக நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க வேண்டும்.
அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவிதமான தளர்வுகளையும் தராமல் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்தவேண்டும், என்றார்.
கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago