தமிழக முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்காக புதுக்கோட்டை ஆட்சியர் அலுவ லகத்தில் ஆட்சியர் கவிதா ராமுவிடம் தனது முதல் மாத சம்பளத்தை கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எம்.சின்னதுரை நேற்று வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கட்சியின் ஆலோ சனைப்படி தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக எனது ஒரு மாத சம்பளம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை வரைவோலையாக ஆட்சியரிடம் வழங்கியுள்ளேன்.
மேலும், கந்தர்வக்கோட்டை தொகுதியில் அதிக எண்ணிக்கை யிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசின் ஒத்துழைப்போடு மேற்கொள்வேன் என்றார். அப்போது, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago