கரோனா அறிகுறிகளை கண்டறியும் பணி ஆய்வு :

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம்கள், வளர்ச்சித் திட்டப் பணிகள், ரேஷன் கடைகள் உள்ளிட்டவற்றை ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று ஆய்வு செய்தார்.

கருப்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்காம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்.

வேங்காம்பட்டி, சிவாயம் பகுதிகளில் களப்பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு கரோனா அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை செய்வதை பார்வையிட்டார். அப்போது, களப்பணியாளர்களின் வருகை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, சிவாயம் ஊராட்சி குப்பாச்சிப்பட்டி ரேஷன் கடையில், கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்வுகளில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் சந்தோஷ்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஜயசங்கர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கருப்பத்தூர் ரெங்கம்மாள், சிவாயம் திருமூர்த்தி, பாப்பக்காப்பட்டி சசிகலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்