குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில்புதுக்கோட்டையையும் சேர்க்க வேண்டும் : தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடி தொகுப்பு திட் டத்தில், காவிரி பாசனம் செய்து வரும் புதுக்கோட்டை மாவட் டத்தையும் சேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து, விதை, இடுபொருட்கள் வழங்குதல், பண் ணைக்குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகளை உள்ளடக்கிய ரூ.61.09 கோடியில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுவதும், திருச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளுக் கும் தமிழக அரசு நேற்று முன் தினம் அறிவித்தது.

ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாயில் இருந்து காவிரி நீர் மூலம் 25,000 ஏக்கரில் பாசனம் செய்யப்படும் நிலையில், குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் இம்மாவட்டத்தையும் சேர்த்து அறிவிக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, திருவரங்குளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களில் குறிப்பிட்ட கிரா மங்களில் காவிரி நீர் பாசனம் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் இந்த ஒன்றியங் களில்தான் அதிக எண்ணிக் கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும். இந்த ஒன்றிங்களையும் டெல்டா பகுதிகளாக கருதி பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தமிழக அரசு சேர்த்துள்ளது.

இந்நிலையில், காவிரி குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை நீக்கி இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட 5 ஒன்றியங்களில் காவிரி பாசனம் நடைபெறும் கிராமங்களை தொகுப்பு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்