சேத்துப்பட்டு மற்றும் தேவிகா புரம் பகுதியில் இன்று (19-ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற் பொறியாளர் ரவிச்சந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட் டம் சேத்துப்பட்டு மற்றும் தேவிகாபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் இன்று (19-ம் தேதி) நடைபெறவுள்ளது. இதனால், சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல் வில்லிவனம், வேப்பம்பட்டு, கோனாமங்கலம், நந்தியம் பாடி, மருத்துவம்பாடி, இடையங் கொளத்தூர், நம்பேடு, கரிப்பூர், தத்தனூர், கங்கை சூடாமணி, உலகம்பட்டு, அப்பேடு, பெருவலூர், மோடிபட்டு, பருதிபுரம், தேவிகாபுரம், தச்சாம்பாடி, மொடையூர், ஆத்துரை, நரசிங்கபுரம், தும்பூர், ஓதலவாடி, பத்தியாவரம், தச்சாம்பாடி, ஊத்தூர் கிழக்கு மேடு, கொத்தந்தவாடி, ராஜமாபுரம், சவரப்பூண்டி, தேவி மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago