திருப்பூரில் எழுந்த போலி சிஎஸ்ஆர் விவகாரம் தொடர்பாக, காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஈரோட்டை சேர்ந்தவர் நாகராஜன் (58). இவருக்கு சொந்தமான வீடு, காங்கயம் சாலை கே.என்.பி.லே-அவுட்டில் உள்ளது.கடந்த ஆண்டு வீட்டு பத்திரங்கள் காணாமல்போனது தொடர்பாக, மத்திய போலீஸாரிடம் புகார் அளித்தார். இதற்கு சி.எஸ்.ஆர். மற்றும் என்.ஓ.சி.-யை காவல்துறையினர் வழங்கினர்.
அதன்பின்னர், திருப்பூர் பத்திரப்பதிவு ஜாயின்ட்- 2 அலுவலகத்தில் நாகராஜன் விண்ணப்பித்தார். அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், காவல்துறை தரப்பில் வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையிடம் விளக்கம் கேட்கப்பட, காவல்நிலையம் சார்பில் சிஎஸ்ஆர் வழங்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஜாயின்ட் 2- சார் பதிவாளர் முத்துக்கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலி ரசீது தொடர்பாக வழக்கு பதிந்துநாகராஜனை கைது செய்தனர். இதுதொடர்பாக, மத்திய காவல்நிலையத்தை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காளிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து, திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் வனிதா உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago