இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆவேசமடைந்த அந்த கிராமம் சார்ந்த பெண்கள் நேற்று பெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம பெண்கள் சிலர் கூறியதாவது: 100 நாள் வேலை திட்டத்தில் கிராம மக்கள் ஒற்றுமையுடன் பணியாற்றி வந்தோம். தற்போது திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் ஒற்றுமையுடன் இருந்த கிராமத்தில் அரசியல் சாயத்தைப் பூசி ஒருவருக்கொருவர் விரோதப் போக்கை கட்சிகள் ஏற்படுத்துகின்றன. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடந்தையாக உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு காணவும், தகுதியான பயனாளிகளுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago