மாற்றுத்திறனாளிகள் தேசிய நிறுவனத்தில் : ஆரம்ப நிலை பயிற்சி மையம் திறப்பு விழா :

By செய்திப்பிரிவு

இந்த பயிற்சி மையத்தில் 6 வயதுடைய குழந்தைகளுக்கு, உடலில் ஏதேனும் ஊனம் மற்றும் குறைபாடுகள், வளர்ச்சி நிலையில் ஏற்படும் தாமதம், இயலாமை உள்ளவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் தொழில்முறை உதவிகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், குழந்தைக்கு ஆரம்ப நிலையிலேயே குறைபாடுகளை கண்டறிந்து, முறையான பயிற்சி மூலம் குறைபாட்டை விரைவாக சரி செய்வதற்கு பயிற்சி மையம் உதவியாக இருக்கும்.

இப்பயிற்சி மையத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலாட் காணொலி மூலம் நேற்று தொடங்கிவைத்தார். இதில், இணை அமைச்சர்கள் ரதன் லால் கட்டாரியா, ராம்தாஸ் அதாவலே, கிருஷன் பால் குர்ஜார் மற்றும் செயலர் அஞ்சலி பவ்ரா, இணை செயலர் தாரிகா ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்