சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்ட - மளிகைப் பொருட்களில் 100-க்கு 5 பாக்கெட்டுகள் மாயம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து எடுத்து வரப்பட்ட மளிகைப் பொருட்களில் 100-க்கு 5 பாக்கெட்டுகள் வரை மாயமாகி உள்ளன.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூன் 15 முதல் 14 வகை மளிகைப் பொருட்கள் தொகுப்பு, 2-ம் கட்ட நிவாரணத் தொகை ரூ. 2 ஆயிரம் வழங்கப் படுகிறது. இதற்காக ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை கார்டுதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் சிவகங்கை மாவட் டத்துக்கு குறைந்த அளவே மளிகைப் பொருட்கள் வந்துள் ளன.

இதனால் மளிகைப் பொருட்கள் தினமும் ரேஷன் கடை ஒன்றுக்கு 100 முதல் 150 தொகுப்பு மட்டுமே நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து அனுப்பப்படுகின்றன. அதுவும் ரேஷன் கடை ஊழியர்களே வாக னங்களில் எடுத்து வருகின்றனர்.

மேலும் 14 வகை பொருட்களும் தனித்தனி மூட்டைகளில் இருப்பதால், அவற்றை பிரித்து மொத்தமாக ஒரு பையில் வைத்து, கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குகின்றனர். அவ்வாறு மூட்டைகளை பிரித்து எண்ணும்போது ஒவ்வொரு பொருளிலும் 100-க்கு 5 பாக்கெட்கள் வரை மாயமாகியுள்ளன. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கூறியதாவது: நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ஒவ்வொரு மளிகைப் பொருளையும் தனித்தனி மூட்டைகளில் கொடுக்கின்றனர். அவற்றை பிரித்து ஒரு பையில் வைப்பதற்கு தனியாக 3 பேர் தேவைப்படுகின்றனர். இதற்கு நாங்களே கூலி கொடுக்கிறோம். மேலும் ஒவ்வொரு பொருளிலும் 100-க்கு 5 பாக்கெட்டுகள் வரை குறைவாக உள்ளன.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. இப்பொருட்களை நாங்கள் வெளிக்கடைகளில் இருந்து எங்கள் செலவில் வாங்கித் தர வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்