கிருஷ்ணகிரியில் போலி ஆவணங்கள் தயாரித்து - ரூ.2.70 கோடி கையாடல் செய்த மின் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் ரூ.2.70 கோடி கையாடல் செய்த, மின் ஊழியர்கள் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (40). இவர், மத்தூர் மின்வாரிய கிராம பிரிவில் வருவாய் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில், போச்சம்பள்ளியைச் சேர்ந்த செல்வம் (40) என்பவர், கணக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி முதல் 2021 மே மாதம் வரை ரூ.2 கோடியே 70 லட்சம் 55 ஆயிரத்து 769 கையாடல் செய்தது தணிக்கையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக மின்வாரிய உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தி, கணேசன், செல்வம் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்தனர். இந்நிலையில், மத்தூர் பிரிவு உதவி பொறியாளர் பெருமாள், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணையன், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தலை மறைவாக உள்ளவர்களை தேடி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்