அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட புள்ளம்பாடி கிளை வாய்க்கால்களான சுள்ளங்குடி வாய்க்கால், அரண்மனைக் குறிச்சி வடிகால் வாய்க்கால், வெங்கனூர் மற்றும் கரைவெட்டி ஆண்டி ஓடை வாய்க்கால், கரைவெட்டி மற்றும் கீழகாவட்டாங்குறிச்சி வேட்டக்குடி உபரிநீர் வாய்க்கால், விரகாலூர் மற்றும் குந்தபுரம் வெற்றியூர் ஓடை, கீழக்கொளத்தூர் மொட்டைய பிள்ளை ஏரி, செட்டி ஏரி ஆகிய 10 வாய்க்கால்களில் ரூ.1.18 கோடி மதிப்பில் 36.85 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், பணிகளை உயர்தரத்துடன், பருவமழைக்கு முன்பாக விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago