ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து - ஆர்ப்பாட்டம் நடத்திய 81 விவசாயிகள் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கருக்காகுறிச்சி வடதெருவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஒப்பந்த அறிவிக்கையை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது.

இதை ரத்து செய்யக்கோரி கீரமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் மு.மாதவன் தலைமையில் ஜூன் 15-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் மீது கீரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கறம்பக்குடியில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.கே.ஆரோக்கியசாமி உட்பட 25 பேர், பொன்னமராவதியில் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய பொறுப்பாளர் பிரதாப்சிங் உட்பட 11 பேர் என மொத்தம் 81 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்