திருப்பத்தூர், ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் - மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு வார்டுகளில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை வந்தார். அப்போது, கரோனா நோயாளிகளுக்கு அளிக் கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், ஆக்சிஜன் இருப்பு, தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் குறித்து தலைமை மருத்துவர் திலீபனிடம் கலந்தாலோசனை நடத்தினார். பிறகு, கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளித்து விரைவில் குணமடைந்து வீடு திரும்ப மருத்துவப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வந்தார். அங்கு, ஆம்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் அ.செ.வில்வநாதன் மற்றும் தலைமை மருத்துவர் ஷர்மிளா ஆகியோர் பாதுகாப்பு முழு உடல் கவசம் அணிந்தபடி கரோனா வார்டுக்குள் சென்று கரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தனர்.

பிறகு, கரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப தேவையான உதவிகளை மருத்துவப்பணியாளர்கள் செய்து கொடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

முன்னதாக, ஆம்பூர் ரோட்டரி சங்கம் சார்பில், ரூ.1.75 லட்சம் மதிப்பில் 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் முன்னிலையில் ரோட்டரி சங்கத்தி னரால் வழங்கப்பட்டது.

அதன் பிறகு, ஆம்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது காயமடைந்த தொழிலாளியின் வீட்டுக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அங்கு காயமடைந்த தொழிலாளியை நேரில் சந்தித்து அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்குமாறு ஆம்பூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்