கரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கையை திருப்பூர் மாவட்டத்தில் குறைக்கவில்லை என, திருப்பூர் மாவட்ட ஆட்சியராகபொறுப்பேற்ற வினீத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் அனைத்து துறை திட்டங்களும், மக்களை சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும். முதல்கட்டமாக அனைத்துத் துறை அலுவலர்களும் இணைந்து கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
கரோனா தடுப்புப் பணிகளை இன்னும் கூடுதல் ஆர்வத்துடன் மாவட்டத்தில் மேற்கொள்வோம்.
தடுப்பூசி தொகுப்பினை அதிகளவில் வாங்கி, மக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ‘ஸ்வாப்’ பரிசோதனை முடிவுகள் தாமதமாவதாக சொல்கின்றனர். இதுதொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு உள்ளது.
சளி பரிசோதனை முடிவுகள், விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரிசோதனை எண்ணிக்கையை மாவட்டத்தில் குறைக்கவில்லை. ஆனால் மாவட்டத்தில் தொற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலர்களும், அரசுப் பணியாளர்களும், மாவட்ட ஆட்சியர் வினீத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago