கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசின் உத்தரவுப்படி, கரோனாதொற்று காரணமாக 2020-2021 -ம்ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மனுக்களைஇணைய வழி மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம்செய்து மட்டுமே உரிய தீர்வுகாணப்படவுள்ளது.
அதன்படி, கோவை, திருப்பூர்மாவட்டங்களிலுள்ள வருவாய்வட்டங்களில் கரோனா தொற்றைகட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான ஜமாபந்தி மனுக் களை அளிக்க வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வர வேண்டாம். பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா,முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல் எனஅனைத்துவிதமான இணையவழிச் சான்றுகள் உள்ளிட்ட இதர கோரிக்கை மனுக்களை https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணைய வழி மூலமாகவும் அல்லது பொது இ-சேவை மையம் மூலமாகவும் வரும் 31-ம் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, இணைய வழி மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக பெறப்படும் மனுக்களை பரிசீலனை செய்து,மனுதாரருக்கு உரிய தகவல் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago