விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டு தயார்: அமைச்சர் பொன்முடி :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை களுக்கான கரோனா சிறப்பு வார்டு தயாராக இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 22 லட்சம் மதிப்பிலான 50 ஆக்சிஜன் செறி வூட்டிகள் மற்றும் 12 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அமைச்சர் பொன்முடியிடம் வழங்கப்பட்டது. அதனை அவர் மருத்துவக்கல்லூரி முதல்வர் குந்தவை தேவியிடம் ஒப்படைத்தார்.

பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியது:

கரோனா நோய் தொற்றின் மூன்றாவது அலை வந்தால் அதை எதிர்கொள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு 100 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது. சிறப்பு மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் வழங்க தமிழக முதல்வர் குழு அமைத்துள்ளார். குழுவின் அறிக்கைக்கு பிறகு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது என்று தெரிவித்தார்.

ஆட்சியர் மோகன், எஸ்பி நாதா, எம்எல்ஏக்கள் புகழேந்தி,லட்சுமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்