நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாட்டு வண்டி மற்றும் வேன் ஆகியவற்றின் மூலம் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதற்கு அதிக செலவு ஏற்படுகிறது. இதனால் விவசாயி கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் மஸ்தானிடம் நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் அரசு நேரடி கொள் முதல் நிலையத்தை அமைக்க வேண்டும் என கடந்த வாரம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பரிசீலனை செய்த அமைச்சர் வேளாண் துறையை தொடர்பு கொண்டு இக்கிராமத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை அமைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள வேட்டவலம் சாலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மஸ்தான் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஷீலா முன்னிலை வகித்தார்.
செஞ்சி ஒன்றிய திமுக செயலாளர்கள் விஜய குமார், விஜயராகவன், திமுக இளைஞர் அணி கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago