வேலூர் மாவட்ட ஆட்சியராக குமாரவேல் பாண்டியன் பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட ஆட்சியராக குமாரவேல் பாண்டியன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த சண்முகசுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணி யிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த குமாரவேல் பாண்டியன் வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அவர் நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆட்சியர் சண்முக சுந்தரம் மாவட்ட நிர்வாக பொறுப்புகளை புதிய ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் புதிதாக பொறுப்பேற்ற குமாரவேல் பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடான கலந்தாலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி முகாம், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்