முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஏஇபிசி சார்பில் ரூ.1.60 கோடி :

By செய்திப்பிரிவு

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் (ஏஇபிசி) தலைவர் ஏ.சக்திவேல் நேற்று கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, நேர்மறையான சிறந்த திட்டமிடலால், தற்போது தமிழகம் முழுவதும் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இது தமிழக மக்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் அளித்து வருகிறது.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்காக திருப்பூரை தேர்ந்தெடுத்தமைக்கு, முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது சிறு, குறு நடுத்தரநிறுவனங்களுக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் தமிழக முதல்வர்ஒரு பாதுகாவலராக இருப்பதாக உணர்கிறோம்.

மேலும், தடுப்பூசி திட்டத்தைசிறந்த முறையில் செயல்படுத்த,மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஏஇபிசி பணியாற்றி வருகிறது.

எனவே, பின்னலாடைத் துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை குறிப்பாக பெண் தொழி லாளர்களை கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் தேவையான தடுப்பூசிகளை வழங்கிடுமாறு முதல்வரைநேரில் சந்தித்துக் கேட்டுக்கொண்டேன். அவரும் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் (ஏஇபிசி) சார்பாக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, முதல் தவணையாக ரூ.30 லட்சம், திருப்பூரில் முதல்வரிடம் வழங்கினோம். தொடர்ச்சியாக நேற்று தலைமைசெயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்து ரூ.1 கோடியே 60 லட்சத்து 37 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினோம். அப்போது ஏஇபிசி செயற்குழு உறுப்பினர் பி.பாலசுப்பிரமணியம் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்