திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை,நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்க வேண்டும். தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது.
மருத்துவக் கழிவுகளை முறையாக கையாள்வதற்காக மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் பல்வேறு துறைகளுக்கு ஏற்கெனவே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், சாலைகள், நீர்நிலைகளில் சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் வருகின்றன. கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடும்பாதிப்பை ஏற்படுத்தும். எனவே,மருத்துவமனைகள், கரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து, அந்தந்த பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். விதிகளை மீறிசாலைகள், நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago