கரோனா தொற்றாளர்களுக்கு உதவிடும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடங் கப்பட்டுள்ளன.
தஞ்சாவூரை சுற்றி உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கரோனா தொற்றாளர்கள் நாள்தோறும் ஆக்சிஜன் தேவைக்காக தஞ் சாவூர் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் அனுமதிக்கப் படுகின்றனர். இதனால், இங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, தொண்டு நிறு வனங்கள், தன்னார்வ அமைப் புகள் மூலம் அரசு மருத்துவ மனைகளில் நிரந்தரமாக ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஏற்பாடு செய் தார்.
அதன்படி, தஞ்சாவூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத் துவமனை, கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்து வமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப் பட்டன. இதன் மூலம் அங்குள்ள இயற்கையான காற்றைக் கொண்டு நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, 22 படுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு வழங்க முடியும்.
இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து திட்ட ஒருங் கிணைப்பாளர் அமல் ஸ்டாலின் பீட்டர் பாபு மற்றும் தலைவர் எஸ்.முகமதுரஃபி ஆகியோர் கூறியதாவது: அரசு மருத்துவ மனைகளில் போதிய இடம் இருந் ததால், இங்கேயே ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தொடங்க ஆலோசிக்கப்பட்டது. இதை யடுத்து, 54 லயன்ஸ் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளோம். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இதன் பராமரிப்பை லயன்ஸ் சங்கங்கள் மேற்கொள்ளும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago