தமிழகத்தில் இனி தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என நம்பு வதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி யில் கரோனா சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 11 பேரிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்க ளுக்கு முன்பாக 1,196 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் தற்போது படிப்படியாக குறைந்து 500 என்ற அளவில் உள்ளது. தஞ்சாவூர் மருத்துவமனையில் குழந்தையின் விரல் துண்டானது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.
ஆய்வின்போது, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி.செழியன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் ம.கோவிந்தராவ், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், டிகேஜி.நீலமேகம், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக திருச்சி விமானநிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: மத்திய அரசு ஜூன் மாதத்துக்கு கொடுக்க வேண்டிய தடுப்பூசி மருந்துகளை அட்டவணைப் படுத்தி, அதற்கேற்ப பிரித்துக் கொடுத்து வருகிறது. நாமும் அவற்றை மாவட்ட வாரியாக விநியோகித்து வருகிறோம். எனவே இனிமேல் தட்டுப்பாடு இருக்காது என நினைக்கிறேன்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கையை குறைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. நானும், சுகாதாரத்துறைச் செயலா ளரும் இதுவரை 23 மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டத்தை நடத்தியுள் ளோம். அப்போது கரோனா தொற் றால் ஏற்படும் ஒரு மரணத்தைக் கூட மறைக்கக்கூடாது என ஆட்சி யர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
கரோனாவால் பாதிக்கப்படு வோர் சிகிச்சையில் சேரும்போது பாசிட்டிவ் ஆக இருக்கும். 7 நாட்களில் அது நெகட்டிவ் ஆக மாறி விடும். அதன்பின், நுரை யீரல் பாதிப்பு, இணை நோய்கள் காரணமாக இறக்கும்போது, அவ ருக்கு பாசிட்டிவ் ஆக இருக்காது. ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி ஒருவர் மரணிக்கும் தருவாயில், அதற்கு என்ன நோய் காரணமாக இருந்ததோ அதைத்தான் சான்றிதழில் குறிப்பிட முடியும். தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago